மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு $5.75 மில்லியன் பரிசு
																																		உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 5.75 மில்லியன் டாலர் பரிசை அறிவித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில், பெண்கள் அணியைப் பாராட்டுவதற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும், இந்த தொகை வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் தேர்வாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா(Devajit Saikia) குறிப்பிட்டுள்ளார்.
இந்த மகளிர் உலகக் கோப்பையின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை $13.88 மில்லியன் ஆகும், இது கடந்த ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத் தொகையை விட அதிகமாகும்.
(Visited 5 times, 2 visits today)
                                    
        



                        
                            
