இலங்கை: மொரகஹஹேன அருகே இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி மரணம்
களுத்துறை மாவட்டம் மொரகஹஹேன (Moragahena) நகருக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் ஹொமாகம(Homagama) பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
ஹொரணையில்(Horana) இருந்து மொரகஹேன நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி திடீரென கவிழ்ந்து எதிர் பாதையில் சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்திற்கு பிறகு குறித்த நபர் ஹொரணையில் உள்ள அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்துக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஹொரணை காவல்துறை தெரிவித்துள்ளது.





