ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஸ்கேனர்கள் நிறுவப்படுமா?

பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை ரயிலில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் செய்தியாளர் ஒருவர்  ரயில் நிலையங்களில் விமான நிலைய பாணி பாதுகாப்பு ஸ்கேனர்கள் நிறுவப்படுமா என போக்குவரத்துச் செயலாளரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து செயலாளர்,  இந்த திட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றது எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், மக்கள் பலர் இந்த திட்டம் குறித்து யோசிக்கக்கூடும்.  எங்களிடம் இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன.

மேலும் அந்த நிலையங்களில் பல நுழைவாயில்கள், பல தளங்கள் உள்ளன. ஆகவே இந்த திட்டத்தை செயற்படுத்துவது சாத்தியமற்றது” எனக் கூறினார்.

ஆனால் பொதுப் போக்குவரத்து வலையமைப்பைப் பாதுகாப்பாக மாற்றுவதற்கு விவேகமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக ரயில் நிலையங்களில் காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!