பெல்கோரோட் பிராந்தியத்திற்குள் நுழைய முயன்ற உக்ரைன் – விரட்டியடித்த ரஷ்ய ராணுவம் (வீடியோ)
பெல்கோரோட் பிராந்தியத்திற்குள் நுழைய முயன்ற உக்ரைனிய ராணுவத்தை தடுத்து நிறுத்தி இருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கியது, தற்போது கிட்டத்தட்ட 16 மாதங்களாக மிக நீண்ட போராக நீடித்து வருகிறது.ரஷ்ய படைகள் உக்ரைனின் சில இடங்களை பிடித்து வைத்து இருக்கும் நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைனிய ஆயுதப் படை எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தலைநகர் கீவ் மற்றும் உக்ரைனிய நகரங்கள் மீது தொடர்ந்து 3 நாட்கள் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
Russian Defense Ministry reported four unsuccessful attempts by the Ukrainian military to enter the #Belgorod region.
The ministry claims that the Russian military managed to repel all the intrusion attempts and killed more than 50 people.
The Defense Ministry also published a… pic.twitter.com/j2ugmLv4gb
— NEXTA (@nexta_tv) June 1, 2023
இந்நிலையில் ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்திற்குள் நுழைய முயன்ற உக்ரைனிய ராணுவத்தின் நான்கு முயற்சிகள் தோல்வியடைந்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்களின் அத்துமீறிய ஊடுருவல் முயற்சியை ரஷ்ய ராணுவம் தடுத்து இருப்பதாகவும், இதில் 50 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.மேலும் எதிரிகளை விரட்ட ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் காட்சிகளையும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.