இலங்கையில் தென்படும் கண்கவர் சூப்பர் மூன் (supermoon)!
																																		இலங்கை முழுவதும் ஒரு கண்கவர் சூப்பர் மூன் (supermoon) இன்று வானில் தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (Arthur C. Clarke Institute for Modern Technologies) தெரிவித்துள்ளது.
இது வழக்கமான முழு நிலவை விட சுமார் 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை சந்திரனின் சுற்றுப்பாதை பூமிக்கு மிக அருகில் சுமார் 356,980 கி.மீ தொலைவில் வரும்போது இந்த நிகழ்வு இடம்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலவு வானில் தென்படும்போது கடலோர அலைகள் அதிகமாக இருக்கும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)
                                    
        



                        
                            
