ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் தீவிரம் – முட்டைத் தட்டுப்பாடு அபாயம்!
ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவுவதோடு கோழிப் பண்ணைகள் மற்றும் முட்டைகளைப் பாதிக்கிறது.
இதுவரை, நோய் பரவாமல் தடுக்க சுமார் 500,000 கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.
இந்த நோய் மேலும் மோசமடையக்கூடும் எனவும், நிலைமை ஏற்கனவே 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் காலத்தைப் போலவே உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், முட்டை விலைகள் விரைவில் உயரக்கூடும். பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி, 2.50 யூரோக்களிலிருந்து 3.50 யூரோக்களுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைகள் உடனடியாக உயராது எனவும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். சுமார் 70 சதவீத முட்டைகள் ஏற்கனவே நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் விற்கப்படுகின்றன.
இது விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், தொற்றுநோய் தொடர்ந்தால் குறுகிய கால சந்தை விலைகள் கடுமையாக அதிகரிக்கக்கூடும்.
ஜெர்மனியில் உட்கொள்ளப்படும் வாத்துகளில் சுமார் 20 சதவீதம் மட்டுமே உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகுதி, ஹங்கேரி மற்றும் போலந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பறவைகள் கடைகளுக்குச் செல்வதற்கு முன்பே அகற்றப்படுகின்றன.
இருப்பினும், கோழிகளை நன்கு சமைக்கவும், பச்சை முட்டைப் பொருட்களைத் தவிர்க்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.





