இலங்கையில் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதுடன், சுகவீன பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
சுகவீனத்தையும் சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்பச் சுட்டெண் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் “Caution Level” எனப்படும் எச்சரிக்கை அளவிற்கு உயர வாய்ப்புள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீர்ச்சத்துடன் இருத்தல், மெல்லிய ஆடைகளை அணிதல் மற்றும் நண்பகல் நேரங்களில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதைத் தவிர்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





