சுவிட்ஸர்லாந்தில் இரகசியமாகக் கண்காணிக்கப்படும் மக்கள் – சீனக் குழுவால் அச்சுறுத்தல்
சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் திபெத்தியர்கள் மற்றும் உய்குர் இனத்தவர்கள் இரகசியமாக கண்காணிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் சீனாவால் கண்காணிக்கப்படுகிறார்கள் அல்லது தங்கள் சமூகத்தினரை வேவுபார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுவிஸ் நாட்டின், பாசல் பல்கலைக்கழகத்திடம் நீதித்துறைக்கான பெடரல் அலுவலகம் ஒரு அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொண்டது.
அதில், இரண்டு குழுக்களும் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உட்படப் பல வழிகளில் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்த குழுக்களுடன் தொடர்புடைய சுவிஸ் குடிமக்களும் கண்காணிக்கப்படுகிறார்கள்.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களை நாடுகடந்த அடக்குமுறையிலிருந்து பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை ஆராய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.





