ஐரோப்பா செய்தி

சில மணி நேரங்களில் மரணத்தை ஏற்படுத்தும் தொற்று – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

இங்கிலாந்தில் மூளை காய்ச்சலை ஏற்படுத்தும் மெனிங்கோகோகல் (meningococcal) வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் பெரும்பாலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், வைரஸ் தொற்று வேகமாக பரவக் கூடியது எனவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த பாக்டீரியா தொற்று, சில மணி நேரங்களுக்குள் பரவி, மரணத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே  தடுப்பூசி போடப்படுவது குறைந்த அளவில் இருப்பதால் அவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வழக்கத்தை விட அதிகமான இளைஞர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மூளைக்காய்ச்சல் என்பது மூளை மற்றும் முதுகுத் தண்டைப் பாதுகாக்கும் சவ்வுகளில் ஏற்படும் தொற்றாகும்.

காய்ச்சல், தலைவலி, சோர்வு, உடல் வலிகள் மற்றும் வாந்தி போன்ற ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமாக ஏற்படும் காய்ச்சல்களைபோல பொதுவான நோய்களை ஒத்திருப்பதால் பெரும்பாலானவர்கள் கவனிக்காமல் இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது செப்சிஸ் (sepsis) மற்றும் இரத்தம் விஷமாகுவதற்கு (blood poisoning)  வழிவகுக்கும், இது ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!