வாழ்வியல்

உடல் எடையின் ஆபத்து குறித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மனிதர்கள் உடல் எடையைக் குறைப்பது தொடர்பில் பின்பற்றும் நடைமுறைகளின் ஆபத்து குறித்து புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உடல் நிறை குறியீட்டை (BMI) மட்டுமே ஆரோக்கியத்தின் முக்கிய அளவீடாகப் பயன்படுத்துவது முறையானது இல்லை என இந்த ஆய்வின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

91 நாடுகளில் 471,000 பெரியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், எடை மற்றும் உயரத்தை மட்டுமே கருத்தில் கொள்வதால், ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் உள்ளுறுப்புக் கொழுப்பை (Visceral Fat) அடையாளம் காணத் தவறவிடப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

மக்கள் மெலிதாகத் தோன்றினாலும், உடலின் முக்கிய உறுப்புகளைச் சுற்றி அதிக கொழுப்பைச் சேமித்து வைக்கும் ஒல்லியான கொழுப்பு (Thin Fat) என்ற நிலை தீவிரமடைந்து வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுவாக உடல் நிறை குறியீடு (BMI) சாதாரணமாக உள்ளவர்களில், 5 பேரில் 1 பேருக்கு உண்மையில் வயிற்றுப் பருமன் (Abdominal Obesity) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ‘ஒல்லியான கொழுப்பு’ உள்ளவர்களின் வளர்சிதை மாற்றம், பருமனானவர்களின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் ஒத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளுறுப்புக் கொழுப்பு (Visceral Fat) உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 81 சதவீதம் உள்ளதாகவும், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்து 29 சதவீதம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் பழங்கள், காய்கறிகளை குறைவாக உட்கொள்வதால் இவ்வாறான நிலை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடல் நிறை (BMI) மட்டுமே ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் என்பதை மட்டும் நம்பாமல், இடுப்புச் சுற்றளவையும் (Waist Circumference) பார்ப்பது அவசியம் என ஆய்வினை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெண்கள் தங்கள் இடுப்புச் சுற்றளவு 32 அங்குலத்திற்கு அதிகமாகவும், ஆண்கள் 37 அங்குலத்திற்கு அதிகமாகவும் இருந்தால், உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான