வியாழன் கிரகத்திற்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் – பூமியைப் பாதுகாக்கும் காவலன்
 
																																		சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழன் (Jupiter), ஒரு புதிய ஆய்வில் விண்வெளிச் சூப்பர் ஹீரோ என்று கண்டறியப்பட்டுள்ளது.
பூமியை உருவாக்கக் காரணமாக இருந்த வியாழன் பல வியக்கவைக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளதாக, ரைஸ் பல்கலைக்கழக (Rice University) விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவானபோது வியாழன் கோள் மிக வேகமாகப் பெரிதானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழனின் பிரம்மாண்டமான ஈர்ப்பு விசை, உள்ச் சூரியக் குடும்பத்தை (Inner Solar System) நோக்கி வந்த வாயு மற்றும் தூசித் துகள்களைக் கட்டுப்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது.
இந்த மூலப்பொருட்கள் சூரியனில் சிக்குண்டு அழிவடைய வேண்டிய நிலையில், வியாழன் கோள் ஈர்ப்பு விசையால் அவற்றை தன்னகத்தே சேமித்து பாதுகாத்துள்ளது. இதன் காரணமாக பூமி, செவ்வாய் போன்ற கிரகங்கள் உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
வியாழன் வெறும் மிகப்பெரிய கிரகமாக மாறவில்லை. அது முழு உள்ச் சூரியக் குடும்பத்திற்கான கட்டிடக்கலையை அமைத்துக் கொடுத்துள்ளதாக, ஆய்வின் இணை-தலைவர் ஆண்ட்ரே இசிடோரோ தெரிவித்துள்ளார்.
வியாழனின் பிரம்மாண்ட ஈர்ப்பு, சூரியனைச் சுற்றியிருந்த கோளத்தில் பெரிய அலைகளை உருவாக்கி, மூலப்பொருட்களைக் குழப்பி ஒரு விண்வெளிக் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழன் வளர்ந்தபோது, சூரியக் குடும்பத்தை ‘உள் மண்டலம்’ மற்றும் ‘வெளிப்புற மண்டலம்’ என இரண்டாகப் பிரித்து, மூலப்பொருட்கள் சுதந்திரமாகப் பாய்வதைத் தடுத்தது.
அத்துடன் விண்கற்களில் காணப்படும் இரட்டை ஐசோடோபிக் கைரேகைகள் (Isotopic Fingerprints) மற்றும் சில விண்கற்கள் ஏன் 2 முதல் 3 மில்லியன் ஆண்டுகள் தாமதமாக உருவாயின என்ற நீண்டகால மர்மத்திற்கும் இந்த ஆய்வின் மூலம் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வியாழன் கோள் இல்லையெனில் பூமி உருவாகியிருக்க வாய்ப்பு இல்லை என இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள்
 
        


 
                         
                            
