பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் படகு மீதான அமெரிக்க தாக்குதலில் 4 பேர் மரணம்
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு படகின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்(Pete Hegseth) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களுக்கு விஷம் கொடுக்க நமது கரைக்கு போதைப்பொருள் கொண்டு வரும் போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு இனி இதுவே நிலைமை என்று ஹெக்செத் Xல் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் படகுகள் மீது நடத்தப்பட்ட 15வது தாக்குதல் இதுவாகும். இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 60க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்தி
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல் – 14 பேர் பலி!





