லசந்த கொலை வழக்கு ; ஏழு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
 
																																		வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர(Lasantha Wickramasekara) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்கள் நவம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (30) மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி உட்பட ஒன்பது சந்தேகநபர்கள் கொலை தொடர்பாக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம தலைவரின் கொலை தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் மோட்டார் சைக்கிள் சாரதியும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ளனர். மேலும் அவர்களை 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர்கள் நேற்று (29) மதியம் நீதித்துறை மருத்துவ அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
        



 
                         
                            
