ஐரோப்பா செய்தி

2026 தேர்தலில் இளம் பிரதமரை தேர்ந்தெடுக்க தயாராகும் நெதர்லாந்து!

நெதர்லாந்தில் பிரதமரை தெரிவு செய்யும் முக்கிய தேர்தலில் கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders)  தீவிர வலதுசாரி கட்சி அரசாங்கம் தோல்வியை தழுவும் என கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அதேபோல்  D66 கட்சியின் இளம் தலைவரான 28 வயதுடைய ரோப் ஜெட்டன் (Rob Jetten) அந்நாட்டின் இளம் பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்சோஸ் (Ipsos) நடத்திய கருத்துக்கணிப்பின்படி, நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள 150 இடங்களில் 27 இடங்களை அவரது கட்சி வெல்லும் என்றும்,  வைல்டரின் (Wilders) சுதந்திரக் கட்சியை 25 இடங்களுடன் வீழ்த்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜெட்டனும்  (Rob Jetten) ஒரு கூட்டணியை நம்பியிருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற   76 இடங்கள் தேவை. அதன்படி ஆட்சியமைக்க வேண்டுமாயின் அவர் குறைந்தது நான்கு கட்சிகளுடன் கூட்டணியை அமைக்க வேண்டும்.

வீட்டுவசதி பற்றாக்குறையைத் தீர்ப்பது, கல்வியில் முதலீடு செய்வது மற்றும் குடியேற்றத்தை சமாளிப்பது என்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் ஜெட்டனும்  (Rob Jetten)  மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கிடையே கீர்ட் வைல்டர்  (Geert Wilders)  மறைமுகமாக தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஜெட்டனுக்கு  (Rob Jetten) வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 8 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி