மழை காரணமாக ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான முதல் T20 போட்டி ரத்து
2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், கடந்த வாரம் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில், இன்று கான்பெர்ராவில்(Canberra) உள்ள மனுகா ஓவல்(Manuka Oval) மைதானத்தில் முதலாவது T20 போட்டி ஆரம்பமானது.
நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
அந்த வகையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 9.4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 97 ஓட்டங்கள் பெற்றுருந்த நிலையில் மழையால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பல மணிநேர இடைவிடாது மழை காரணமாக நடுவர்களால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்(Shubman Gill) 37 ஓட்டங்களும் சூர்யகுமார் யாதவ்(Suryakumar Yadav) 39 ஓட்டங்களும் பெற்றனர்.





