சீனாவில் விசித்திரத் திருடன் – பெண்ணுக்கு வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி
சீனாவில் சூட்சுமமான முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதான சௌ என்ற நபர் வீடொன்றுக்குள் பெண்ணை மிரட்டித் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளார்.
கண்காணிப்பு கெமராவில் சிக்காமல் இருக்கும் வகையில், மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட திருடன், அதனை கொள்ளையடிக்க விரும்பிய பெண்ணின் வீட்டில் வைத்துச் செல்லுமாறு விநியோக ஊழியர் ஒருவருக்குப் பணம் செலுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்யப்பட்ட நிலையில், மரப்பெட்டிக்குள் ஒளிந்திருந்த திருடன், வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை அச்சுறுத்தியுள்ளார்.
இதன்போது 28 பவுண் தங்க நகையையும், 2000 யுவான் நாணயத்தையும் திருடிச் சென்றுள்ளார்.
குறித்த பெண்ணால் தனக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.
மயக்கத்திலிருந்து எழுந்த பெண், உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். அதற்கமையத் திருடன் கைது செய்யப்பட்டார்.
திருடன் தொடர்பான தகவல்களைப் பொலிஸார் வெளியிடவில்லை. எனினும் திருடன் திருட்டு முறை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





