பிரேசிலில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு – பலர் உயிரிழப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில்(Rio de Janeiro) நடந்த சட்ட அமலாக்க நடவடிக்கையில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசிலிய செய்தி நிறுவனமான G1 தெரிவித்துள்ளது.
ரியோ டி ஜெனிரோவின் புறநகரில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளான அலெமாவோ(Alemao), பென்ஹா ஃபவேலா(Penha favelas) பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வன்முறை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆபரேஷன் கன்டெய்ன்மென்ட்(Operation Containment) என்ற முயற்சியின் ஒரு பகுதியாகும்.
நகரில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, உள்ளூர் வரலாற்றில் மிக பெரியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடவடிக்கை நடந்து கொண்டிருந்தபோது காவல்துறையினர் மற்றும் குற்ற கும்பல் இடையே நடந்த துப்பாக்கி சூடு காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
மேலும், இந்த சோதனை நடவடிக்கையில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





