கொழும்பில் புதிதாக 04 மேல் நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை!
ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக 4 புதிய மேல் நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
ஷஇதற்கமைய பொதுநிர்வாக அமைச்சு வசமுள்ள நான்கு கட்டிடங்களை நீதி அமைச்சிடம் கையளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல்நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி ஸ்தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் ஸ்தாபிப்பதற்காக தற்போது பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள கீழ்வரும் முகவரிகளில் அமைந்துள்ள கட்டிடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைப்பதற்காக தமது அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
கட்டிடங்கள் அமைந்துள்ள முகவரி
* இலக்கம் B 88, கிறகெரி வீதி, கொழும்பு 07
* இலக்கம் V 76, பௌத்தாலோக்க மாவத்த, கொழும்பு 07
* இலக்கம் B 108, விஜேராம வீதி, கொழும்பு 07
* இலக்கம் B 12, ஸ்டென்மோர் சந்திரவங்கய, கொழும்பு 07





