அமெரிக்க சுகாதார அமைச்சின் செயலாளரின் அறிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ள நாட்டு மக்கள்
அமெரிக்க மக்கள் தமது உணவில் கொழுப்புச் சத்து பாவனை தொடர்பில் சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளரான ரொபர்ட் எப். கென்னடி ஜூனியர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் தமது உணவில் அதிக நிறைவுற்ற கொழுப்பை (Saturated Fat) சேர்த்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் புதிய உணவு வழிகாட்டுதல்களை அவர் வெளியிடத் திட்டமிட்டுள்ளமை ஊட்டச்சத்து நிபுணர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உணவு வழிகாட்டுதல் வெளியிடுவது வழமையாகும். இதனை அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அமெரிக்க உணவு வழிகாட்டல் ஆலோசனைக் குழு வெளியிடும்.
கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது, இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரித்து, இருதய நோய் (Heart Disease) அபாயத்தை அதிகரிக்கும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் இந்த நடைமுறைகளுக்கு எதிராக புதிய உணவு வழிகாட்டதலை கென்னடி ஜூனியர் வெளியிட்டுள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்கனவே தடுப்பூசி பாவனை தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டிருந்த கென்னடி ஜூனியர், தற்போது உணவு பாவனை தொடர்பில் முரண்பாடான வழிகாட்டலை வெளியிட்டுள்ளார். இது சுகாதார சேவைக்கு பெரும் ஆபத்தாக மாறும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கென்னடி வெளியிட்டுள்ள உணவு பாதுகாப்பு வழிகாட்டலில், பால், இறைச்சி, மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவை மக்கள் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





