பெலாரஸ் (Belarus) உடனான எல்லைகளை காலவரையறையின்றி மூடும் லிதுவேனியா!
பெலாரஸ் (Belarus) உடனான எல்லைகளை காலவரையறையின்றி மூடுவதற்கு லிதுவேனியா (Lithuania) அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லைத்தாண்டி சிகரெட்டுக்களை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சில பலூன்களை அவதானித்துள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இன்று தெரிவித்துள்ளார்.
பலூன்கள் தென்பட்டதை தொடர்ந்து வெள்ளி, சனி மற்றம் ஞாயிற்றுக்கிழமைகளில் வில்னியஸ் விமான நிலையத்தில் (Vilnius Airport) விமான சேவைகள் தடைப்பட்டன.
அத்துடன் சில விமானங்கள் திசை திருப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவசரமாக கூடிய லிதுவேனியாவின் தேசிய பாதுகாப்பு ஆணையம், பெலாரஸுடனான இரண்டு எல்லைக் கடவைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நடவடிக்கையானது வரும் புதன்கிழமை வரை தொடரும் என அந்நாட்டின் பிரதமர் இங்கா ருகினீனே ( Inga Ruginienė) தெரிவித்துள்ளார்.
இராஜதந்திரிகள் மற்றும் இராஜதந்திர அஞ்சல்களுக்கு விலக்குகளுடன், எல்லையை காலவரையின்றி மூடுவதற்கான வரைவு முடிவை அரசாங்கம் ஏற்கனவே வரைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லிதுவேனியா அரசாங்கமானது ரஷ்யாவின் கலினின்கிராட் எக்ஸ்க்ளேவ் (Russia’s Kaliningrad ) மற்றும் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸை (Belarus) எல்லையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




