இலங்கை

வெளிநாட்டு வேலைகளுக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 5 சதவீதத்தினால் குறைந்துள்ளது எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 37 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனர்.

பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு ஊதிய உயர்வு ஆகியவை வெளிநாட்டுத் தொழிலாளர் இடம்பெயர்வைக் குறைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.

அதேவேளை, தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் (Remittances) செப்டம்பரில் 695.7 மில்லியன் டொலராக உயர்ந்தது, இது 2025 ஆம் ஆண்டில் இதுவரை மூன்றாவது மிக உயர்ந்த மாதாந்த வரவாகும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 25.2 வீத அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பணம் அனுப்புதல்கள் ஆண்டுக்கு ஆண்டு 20 வீதம் அதிகரித்து 5.8 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்