இலங்கை சென்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2.832 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 3.4 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
(Visited 4 times, 1 visits today)





