செயற்கை நுண்ணறிவால் ஆபத்து – இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகளை இறுக்கமாக்க புதிய சட்டத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் டீப்பேக் (Deepfake) காணொளிகள் மற்றும் தவறான தகவல்கள் வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
பொய்யான ஊடகத்தை உருவாக்க தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதே இதற்குக் காரணம் எனத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக, சமூக ஊடகங்களில் பரவும் டீப்பேக் (Deepfake) ஒலிப் பதிவுகளும், காணொளிகளும் பொய்யான தகவல்களைப் பரப்புவதாகத் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், நிதி மோசடி செய்யவும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இந்தப் புதிய திருத்தங்கள் சமூக ஊடகங்களின் பொறுப்புகளை வலுப்படுத்துவதோடு, இத்தகைய தவறான பயன்பாட்டை ஓரளவுக்குத் தடுக்கும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையே, அரசாங்க அறிக்கைகளை X, Facebook போன்ற தளங்களுக்குத் தானியக்க முறையில் அனுப்பும் சஹ்யோக் (Sahyog) என்ற இணையத்தளத்தை இந்தியா ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது.





