ரஷ்யாவில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு வீதம் – புடினின் நடவடிக்கை கைக்கொடுக்குமா?
ரஷ்யாவில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
1999 ஆம் ஆண்டில், புடின் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, ரஷ்யாவில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதன் மிகக் குறைந்த பதிவு செய்யப்பட்ட நிலைக்குச் சரிந்தது.
2005 ஆம் ஆண்டில், “சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை” பராமரிப்பதன் மூலம் இந்நிலையை எதிர்கொள்ள புடின் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இருப்பினும் இந்த நிலை இன்றும் தொடர்கிறது. கிரெம்ளின் மக்கள்தொகை மாநாட்டில் உரையாற்றிய அவர், பிறப்பு அதிகரிப்பு ரஷ்யாவிற்கு “முக்கியமானது” என்று கூறினார்.
குழந்தைகளை பெற்றுக்கொள்ள பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பெரிய குடும்பங்களுக்கு இலவச பாடசாலை உணவு முதல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு சோவியத் பாணி “ஹீரோ-தாய்” பதக்கங்களை வழங்குவது வரை பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்.
இருப்பினும் தற்போது நிலவுகின்ற போரில் பல ஆண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கட்டாய இராணுவ சேவையால் பலர் குடும்ப வாழ்க்கையை இழந்துள்ளனர்.
இந்த சூழலில் பிறப்பு விகிதத்தை கையாள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.





