இலங்கை

ஆளும், எதிர்க்கட்சி பிரமுகர்கள் டெல்லி பயணம்!

இலங்கையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய இரு அரசியல் பிரமுகர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கமைய துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக எதிர்வரும் 27 ஆம் திகதி டெல்லி செல்கின்றார்.

மும்பையில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, மும்பை கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, ​​துறைமுகங்கள் அபிவிருத்தி, கப்பல் போக்குவரத்து மற்றும் தளபாடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அமைச்சர் கருணாதிலக, இந்திய துறைமுகங்கள், கப்பல்துறை, நீர்வழிகள் அமைச்சர் சிறி சர்பானந்த சோனோவாலுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

இந்திய கடல்சார் வாரத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதுடன், கடல்சார் மற்றும் தொழில்துறை துறைகளைச் சேர்ந்த முன்னணி பிரமுகர்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

நான்கு நாள் பயணமாக இந்தியா செல்லும் அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்