பெக்கோ சமனின் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரின் பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அறிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
(Visited 5 times, 5 visits today)