அங்காராவிற்கு செல்லும் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் : ஸ்வீடனுக்கு சாதகமாக அமையுமா?
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அங்காராவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்காலத்தில் ஸ்வீடனை நேட்டோவின் உறுப்பினராக்குவது குறித்து விவாதிப்பதற்காக அவருடைய இந்த விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுக்கு நேட்டோவின் அனைத்து நலன்களுக்காகவும் ஸ்வீடன் குழுவில் சேர வேண்டும் என்று ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் செய்தி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
“நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக மாஸ்கோவின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என்பதை அனைத்து நட்பு நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வாரம் ஸ்வீடன் மற்றும் துருக்கியின் வெளியுறவு அமைச்சர்கள் “விரைவில்” கூடி நேட்டோவில் இணைவதற்கான ஸ்டாக்ஹோமின் தாமதமான முயற்சியைப் பற்றி விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.