சிரியாவில் செட்னயா(Sednaya) சிறைச்சாலைக்கு பொறுப்பான முன்னாள் ராணுவ அதிகாரி கைது

முன்னாள் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் (Bashar al-Assad) ஆட்சியின் போது, மோசமான செட்னயா (Sednaya) சிறையில் கைதிகளை தூக்கிலிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டமாஸ்கஸ் (Damascus) மாகாணத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, ஜெனரல் அக்ரம் சலூம் அல்-அப்துல்லாவை (Akram Saloum al-Abdullah) கைது செய்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்ரம் சலூம் அல்-அப்துல்லாவை, செட்னயா சிறையில் கைதிகளை சித்திரவதை செய்ததாக அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
டமாஸ்கஸுக்கு வெளியே உள்ள இந்த சிறைச்சாலையை “மனித படுகொலை கூடம்” என்று உரிமைகள் குழுவான அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அறிவித்துள்ளது.
செட்னயா சிறைச்சாலையில் 2011 முதல் 30,000 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 6,000 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் செட்னயா சிறைச்சாலையின் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.