11 மாத குழந்தையை காரிலேயே விட்டுச்சென்ற பெற்றோர்..!
அமெரிக்காவில் தேவாலய ஆராதனையில் பங்கேற்க சென்ற தம்பதி, தங்களது 11 மாதக் குழந்தையை காருக்குள் அதீத வெப்பம் தாங்காமல் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், ஃப்ளோரிடா மாகாணத்தில் போதையில் இருந்த தம்பதியால் காரில் தனியாக விட்டுச் செல்லப்பட்ட 2 வயது குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்தது.
இந்நிலையில், மவுண்ட் ஆஃப் ஆலிவ்ஸ் எவாஞ்சலிகல் பாப்டிஸ்ட் தேவாலயத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் மயக்கமுற்ற நிலையில் இருந்த குழந்தையை மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
‘hot car deaths’ என்று குறிப்பிடப்பட்டும் இதுபோன்ற சம்பவங்களால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 38 குழந்தைகள் பலியாவதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





