வெலிகம துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
” வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை ஆரம்பமாகியுள்ளது.” என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” காவல்துறை விசாரணைகளின் பிரகாரம் வெளியாகும் தகவல்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று சபையில் வெளியிடக்கூடும்.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அதேவேளை, வெலிகம பிரதேச சபை தவிசாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மூன்று காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன என்று தெரியவருகின்றது.
இதேவேளை வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டார்.
” வெலிகம பிரதேச சபையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. தென்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின்கீழ் 4 குழுக்கள் விசாரணைக்கு களமிறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய விரைவில் தகவல்கள் கிடைக்கப்பெறும் என நம்புகின்றோம். மக்களுக்கும் ஏதேனும் தகவல் தெரிந்தால் அது பற்றி எமக்கு தெரியப்படுத்தலாம்.” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.





