கை சுத்திகரிப்பான்களில் (Hand Sanitizers) பயன்படுத்தப்படும் எத்தனாலை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை

புற்றுநோய் அபாயங்கள் காரணமாக பல கை சுத்திகரிப்பான்களில் (Hand Sanitizers) பயன்படுத்தப்படும் மூலப்பொருளான எத்தனால் (Ethanol) குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் (ECHA) பணிக்குழு அக்டோபர் 10 அன்று எத்தனாலை ஒரு நச்சுப் பொருளாக அறிவித்தது.
எத்தனால் பாவனை புற்றுநோய் மற்றும் கர்ப்ப சிக்கல்களின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பயோசிடல் (Biocidal) தயாரிப்புகள் குழு இது குறித்து முக்கிய கலந்துரையாடலுக்காக நவம்பர் 25 முதல் நவம்பர் 28 வரை கூட உள்ளது. இதன் போது தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு எத்தனால் மற்றும் ஐசோபுரோபனோல் (isopropanol) இரண்டையும் கை சுகாதாரத்திற்காகப் பயன்படுத்த பாதுகாப்பானவை என்று குறிப்பிட்டுள்ளது.