வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைப் பயணம் – கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள்
வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இவரின் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
அதேவேளை, ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக, வெளிவிவகார அமைச்சுக்குரிய குழுநிலை விவாதத்தின்போது நேரமெடுத்து விவாதிக்கலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.





