இலங்கையில் பாதாள குழுக்களுடன் இணைந்து செயற்பட்ட 18 இளம் பெண்கள் கைது

இலங்கையில் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 மற்றும் 45 வயதுக்கிடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரம், துப்பாக்கி கடத்தல், கொலைக்கு உளவு பார்த்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 11 visits today)