உலகம் செய்தி

ஹமாசிற்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதல் – ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஹமாசிற்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், காசாவில் போர் நிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாசும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் நிலையில், போர் நிறுத்தம் மீண்டும் உறுதியாக செயல்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

ரபாவில் தங்களை குறிவைத்து தீவிரவாதிகள் யுத்ததாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, அதில் இரண்டு படைத்தரப்பினர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே, காசா முழுவதிலும் ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும் இஸ்ரேல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 44 பேர் பலியானதாக மருத்துவமனை தரப்பினர் தெரிவிக்கின்றன

இந்த நிலை தொடரும் பட்சத்தில் போர் நிறுத்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகள் கேள்விக்குறியாகியுள்ளது.

போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவின் அழுத்தம் அவசியம் என அங்கு நிலைகொண்டுள்ள ஊடக நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

(Visited 12 times, 12 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி