இலங்கை: ஹிக்கடுவையில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு
காலி மாவட்டத்தின் ஹிக்கடுவையில் (Hikkaduwa) ஒரு வீட்டை குறி வைத்து துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சுமார் 4 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக ஹிக்கடுவ காவல்துறை தெரிவித்துள்ளது.





