இலங்கையில் சற்று முன் இடம்பெற்ற கோர விபத்து – 12 பேர் படுகாயம்!
இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒன்பது சிறுவர்கள் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சபுகஸ்கந்த பகுதியில் உள்ள ஒரு பாடசாலையைச் சேர்ந்த சாரணர் குழு படுவத்தே மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்ச்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து ஒரு தடுப்பணையில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், பேருந்தின் பிரேக்குகள் வேலை செய்யாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 20 சிறுவர்கள் இருந்ததாகவும் அவர்களில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





