இந்தியாவில் காற்றின் தரத்தை நிர்வகிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு!

இந்தியாவில் காற்றின் தரத்தை நிர்வகிப்பதற்கான வழிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் வானவேடிக்கைகள், மற்றும் பட்டாசுக்களை வெடிப்பார்கள். இதனால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு தடை விதித்தது.
இந்தியாவின் தலைநகரில் காற்றின் தரமானது 300-400 என்ற அளவில் உள்ளது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் காற்று தரக் குறியீடு 300 க்கு மேல் உள்ள எதையும் ஆபத்தானதாகவும் சுகாதார அவசரநிலையாகவும் வகைப்படுத்தியுள்ளது.
ஆகவே இதனை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு பட்டாசுகளை வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பசுமை பட்டாசுக்களை வெடிப்பதன் மூலம் காற்று மாசுப்பாட்டை குறைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை 30-50% வரை குறைக்கும் எனக் கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், பட்டாசுத் தொழிலின் குறைந்து வரும் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இவ்வகையான பட்டாசுகளை உருவாக்கியுள்ளதாக தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.