ஐரோப்பா

ரஷ்யாவில் வெடிமருந்து தொழிற்சாலை தீ விபத்து – 3 பெண்கள் பலி, 5 பேருக்கு காயம்

ரஷ்யாவின் தெற்கு பிராந்தியமான பாஷ்கோர் டோஸ்தானில்(Bashkortostan) வெடிமருந்து தொழிற்சாலை செயல்படுகிறது.

உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் அங்கு பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் அதற்குள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 பெண்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதலே காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

போர் நிறுத்தம் தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்