இந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (Eastern Airlines)
ஐந்து வருடங்களுக்கு பிறகு நவம்பர் 9ம் திகதி முதல் ஷாங்காய் (Shanghai) மற்றும் டெல்லி இடையே நேரடி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதாக சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (Eastern Airlines) அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தியான்ஜினில் (Tianjin) நடந்த ஷாங்காய் (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) உடனான சந்திப்பிற்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த சேவை வாரத்திற்கு மூன்று முறை அதாவது புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), கொல்கத்தா மற்றும் குவாங்சோ (Guangzhou) இடையே தினசரி நேரடி விமான சேவையை தொடங்குவதாக அறிவித்திருந்தது.
2020ம் ஆண்டு கோவிட் தொற்றுநோய்களின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன.
தொடர்புடைய செய்தி
5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே ஆரம்பமாகும் நேரடி விமான சேவை





