இலங்கையில் திடீரென சரிந்த தங்கத்தின் விலை : ஏற்றத்திற்கான காரணம் என்ன?
இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில் இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.
அதன்படி, 22 காரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 360,800 ஆகக் குறைந்துள்ளது.
இதே நேரத்தில், நேற்று 410,000 ஆக இருந்த 24 காரட் பவுண் ஒன்றின் விலை இன்று 390,000 ஆகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதன் விளைவாக தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்துள்ளது.
உள்ளூர் நிபுணர்கள் கூர்மையான அதிகரிப்புக்கு சர்வதேச சந்தை அழுத்தங்கள் தான் காரணம் என்று கூறியுள்ளனர்.
“அமெரிக்க கருவூல நிதிகளில் இருந்து நிறைய பணம் வெளியேறுகிறது. ஹெட்ஜ் நிதிகள், பாரம்பரியமாக டொலர் இருப்புக்களை வைத்திருக்கும் மத்திய வங்கிகள் கூட, தங்கள் இருப்பை தங்கமாக மாற்றுகின்றன,” என்று அவர் விளக்கினார்.
இந்த நடவடிக்கை உலகளாவிய உறுதியற்ற தன்மையால் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என லலிதா ஜுவல்லர்ஸ் கொழும்பு நிர்வாக நிர்வாக இயக்குனர் செல்லகுமார் கந்தசாமி (Sellakumar Kandasamy) தெரிவித்துள்ளார்.





