பிரான்ஸில் சிறைக்கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை
பிரான்ஸ் சிறைச்சாலைகளில் பாரிய இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அளவுக்கு அதிகமான கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதால் மிக மோசமான சுகாதார சீர்கேடுகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
மே முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கமைய, பிரெஞ்சு சிறைச்சாலைகளில் தற்போது 73,162 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பிரான்சில் 60,867 பேருக்கான இடம் மட்டுமே உள்ளது. 120% வீதமான கைதிகள் பிரெஞ்சுச் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சென்ற ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 3% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
சில சிறைச்சாலைகளில், ஒரு கைதி தங்கவைக்கப்படும் அறையில் மூன்று கைதிகள் வரை சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
கழிவறை, படுக்கையினை பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. கைதிகள் மிகுந்த சுகாதார சீர்கேட்டுக்குள் சிக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரான்சில் 15,000 கைதிகளுக்கான சிறைச்சாலைகள் கட்டப்பட்டு வருகிறமையம் குறிப்பிடத்தக்கது.