கைதிக்கு போதைப்பொருள் வழங்க ஏற்பாடு: ஜெயிலர் கைது!
கைதியொருவருக்கு போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார் எனக் கூறப்படும் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி (ஜெயிலர்) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர் ஊடாகவே குறித்த கைதிக்கு இவற்றை வழங்குவதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், இதற்கு அவர் ஆதரவு வழங்கியுள்ளார் எனவும் காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள 53 வயதான ஜெயிலரிடம், காவல்துறையினர் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
(Visited 9 times, 1 visits today)





