சிங்கப்பூரில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே வீட்டுக் கடனுக்குரிய நிலையான வட்டி விகிதம் மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதத்தை சில முறை உயர்த்தியதனையடுத்து, சிங்கப்பூரில் வீட்டுக் கடனுக்கான நிலையான வட்டி விகிதம் சென்ற ஆண்டு 4 சதவீத்தை தாண்டியது.
அமெரிக்க மத்திய வங்கி அதன் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ கொள்கையைத் தளர்த்தவோ முயல்கிறது.
அதனால் இங்குள்ள வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துவருவதாக நிபுணர்கள் கூறினர்.
ஆயினும் உரிமையாளர்கள் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்னர் நிதானமாகப் பரிசீலித்து முடிவெடுப்பது நல்லது என்று அவர்கள் தெரிவித்தனர்.
(Visited 4 times, 1 visits today)