ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம் : எல்லையில் தற்கொலைக்குண்டு தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் (Afghanistan)எல்லைக்கு அருகே நடந்த தற்கொலைக் குண்டு தாக்குதலில் 07 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் இன்று நடத்தப்பட்டுள்ளது.
48 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு போராளி வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை இராணுவ முகாமாகச் செயல்பட்ட கோட்டையின் எல்லைச் சுவற்றில் மோதி வெடிக்கச் செய்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இருவர் குறித்த வளாகத்தில் நுழைய முயன்ற நிலையில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக இவ்விரு நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.