கனடாவில் 3வது முறையாக கபில் சர்மாவின் கஃபே மீது தாக்குதல்

கனடாவின் சர்ரேயில்(Surrey) உள்ள கப்ஸ் கஃபே(Kap’s Café) மீது மூன்றாவது முறையாக துப்பாக்கிதாரிகள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கனடாவில் பிரபல பாலிவுட்(Bollywood) நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு(Kapil Sharma) சொந்தமான ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி(Harjit Singh Latty) பொறுப்பேற்றிருந்தார்.
கப்ஸ் கஃபே(Kap’s Café) என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த ஜூன் மாதம் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின்(British Columbia) சர்ரேயில்(Surrey) திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் இந்த ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக கபில் சர்மா ஹோட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குல்வீர் சித்து, கோல்டி தில்லோன் உள்ளிட்ட குற்றவாளி குழுக்கள் பொறுப்பேற்றுள்ளன.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.