மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் – இன்று மோதும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள்
மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டி ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.
7 புள்ளிகளுடன், இங்கிலாந்து அணி 2 ஆவது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அதேநேரம், 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இந்திய அணியும், 03 புள்ளிகளுடன் 05 ஆவது இடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளது.
இலங்கை அணி 02 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்றைய தினம் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.





