இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ஆலோசகராக களமிறங்கும் நியூசிலாந்து வீரர்
19வது ஐபிஎல் (IPL) தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது . இந்த தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் 13ம் திகதியில் இருந்து 15ம் திகதிக்குள் நடைபெற உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2026ம் ஆண்டிற்கான IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants) அணியின் ஆலோசகராக நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் லக்னோ அணி பிளே ஆப் (Play-Off) சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் அந்த அணியின் ஆலோசகராக இருந்த சஹீர் கான் (Zaheer Khan) நீக்கப்பட்டார்.
கேன் வில்லியம்சன் இறுதியாக 2024ம் ஆண்டு நடந்த தொடரில் குஜராத் டைடன்ஸ் (Gujarat Titans) அணிக்காக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.





