இலங்கையில் கட்டாயமாக்கப்படும் மின்னணு பயண அங்கீகார (Electronic Travel Authorization) திட்டம்

சுற்றுலா அல்லது வணிக ரீதியாக குறுகிய காலத்திற்கு இலங்கை வரும் அனைத்து வெளிநாட்டினரும், வருகைக்கு முன்னர் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization) பெறுவது அவசியம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு துறை (Department of Immigration and Emigration) அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறை 2025 அக்டோபர் 15ம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல இலங்கை தூதரகங்களால் சமீபத்திய நாட்களில் பகிரப்பட்ட இந்த அறிவிப்பு, தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வரவிருக்கும் சுற்றுலா காலத்தை நோக்கில் கொண்டு மின்னணு பயண அங்கீகாரத்தை விரைவாகச் செயல்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கை குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
www.eta.gov.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, சீஷெல்ஸ் (Seychelles), மாலத்தீவு (Maldives) மற்றும் சிங்கப்பூர் (Singapore) நாட்டினருக்கு மின்னணு பயண அங்கீகாரம் பெற அவசியம் இல்லை.
சுற்றுலா நோக்கங்களுக்காக சீனா (China), இந்தியா (India), ரஷ்யா (Russia), தாய்லாந்து (Thailand), இந்தோனேசியா (Indonesia), மலேசியா (Maldives) மற்றும் ஜப்பான் (Japan) ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்கள் இலவச மின்னணு பயண அங்கீகாரத்தை பெற முடியும்.
சுற்றுலா அல்லது வணிகத்திற்காக, பிற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலவச மின்னணு பயண அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் போது கட்டாயமாக கட்டணம் செலுத்த வேண்டும்.
இதில் பிரான்ஸ் (France), பிரித்தானியா (United Kingdom), ஸ்பெயின் (Spain), அமெரிக்கா (United States), கனடா (Canada) மற்றும் ஆஸ்திரேலியாவைச் (Australia) சேர்ந்த பயணிகள் அடங்குவர்.
எனவே, இலங்கைக்குச் செல்வதற்கு முன் மின்னணு பயண அங்கீகார விண்ணப்பத்தை இணையவழி மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த செயல்முறை எவ்வித இடையூறும் இன்றி பயனர்களுக்கு விரைவாக செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.