உலகம் செய்தி

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் இந்திய பயணம் நிறைவு

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் (Amir Khan Muttaqi) ஆறு நாள் இந்தியப் பயணம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், அவர் காபூலுக்கு (Kabul) புறப்படுவதற்கு முன், ஷேக்-உல்-ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹசனுக்கு (Sheikh-ul-Hind Maulana Mahmud Hasan) சொந்தமான புனித சால்வை மற்றும் தொப்பியை முத்தாகிக்கு அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

ஷேக்-உல்-ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹசன், ஒரு இந்திய முஸ்லிம் அறிஞர் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் ஆர்வலர் ஆவார், அவர் டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை (Jamia Millia Islamia University) நிறுவியவர்களில் ஒருவர்.

பல தடைகளை தாண்டி 6 நாள்கள் பயணமாக ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி அக்டோபர் 9ம் திகதி இந்தியா வந்தடைந்தார்.

இந்த பயணத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.

மேலும், 2021ம் ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் மூடப்பட்ட காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி