போப் லியோவிற்கு பரிசாக வழங்கப்பட்ட அரேபிய குதிரை

வத்திக்கானில் வாராந்திர பொது கூட்டத்திற்கு முன்னதாக, போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் போப் லியோவிற்கு ஒரு வெள்ளை அரேபிய குதிரையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக மற்ற நன்கொடையாளர்கள் போப்பிற்கு ஒரு வெள்ளை மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு மின்சார காரை பரிசாக வழங்கியுள்ளனர்.
போலந்தின் கோலோப்ரெக்-புட்ஸிஸ்டோவோவில் (Kołobrzeg-Puczysztów) உள்ள மிச்சல்ஸ்கி ஸ்டட் பண்ணையின் (Michalski Stud Farm) உரிமையாளரும் நிறுவனருமான ஆண்ட்ரெஜ் மிச்சல்ஸ்கி (Andrzej Michalski), அரேபிய இனத்தைச் சேர்ந்த புரோட்டானை (Proton) போப்பிற்கு வழங்கினார்.
பதவியேற்பதற்கு முன் பெருவில் போப் குதிரையில் சவாரி செய்யும் புகைப்படங்களைப் பார்த்தபோது, அவருக்கு ஒரு அழகான அரேபிய குதிரையை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததாக ஆண்ட்ரெஜ் மிச்சல்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், இது அவருக்குத் தகுதியானது, ஏனெனில் வெள்ளை இயற்கையாகவே போப்பின் பாதிரியார் உடையுடன் ஒத்திருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பரிசு நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கும், உறுதியான செயல்கள் மூலம் அன்பை வலுப்படுத்த போப்பின் வேண்டுகோளுக்கு பதிலளிப்பதற்கும் வழங்கப்பட்டது என்று ஆண்ட்ரெஜ் மிச்சல்ஸ்கி விளக்கியுள்ளார்.